Friday, September 25SOCIAL MEDIA
Shadow

Month: December 2019

“மாஸ்டர் “படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது

“மாஸ்டர் “படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது

News, Tamil News
தளபதி 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு "மாஸ்டர்" என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது  .இந்தப் படத்தை மாநகரம் ,கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய  படத்தொகுப்பினை பிலோமின் ராஜ்  கவனிக்கிறார்  . தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் . இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் , அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் . "மாஸ்டர் "படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது . ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்  . நடிகர்கள் : தளபதி விஜய் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவ...
2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S

2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S

News, Tamil News
2019-ஆம்  ஆண்டு தமிழ்த்திரையுலகில்  அதிகப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம்.சி.எஸ். பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் ஓர் இசை அமைப்பாளர் அவர். ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சிமொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்கு பின்னணி இசை மிக முக்கியம். சென்ற ஆண்டில் தான் இசை அமைத்த எல்லாப்படங்களுக்கும் அதைத் தவறாமல் தந்திருந்தார் சாம்.சி எஸ். கைதி படத்தில் இருட்டுப் பாதையில் படரும் பதட்டத்தை இசை வழியே மிக அற்புதமாக கடத்தியிருப்பார். இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படத்தில் காதலர்களை ஏங்கவிடும் அளவிற்கு கச்சிதமான இசையை வழங்கி இருப்பார். மேலும் அவர் இசை அமைத்ததில் கே13, 100, அயோக்யா ஆகிய திரில்லர் படங்களுக்கும் , தேவி 2 , ஜடா போன்ற ஹாரர் படங்களுக்கும் அதன் கதையோட்டம் கொஞ்சமும் குறையாமல் தன் இசையால் ரசிகர்களை  கவனிக்க வைத்தார்!  அப்படங்களின் சுவாரசியத்...
படப்பிடிப்பை முடித்த இயகுநர் ரஞ்சித் ஜெயக்கொடி !

படப்பிடிப்பை முடித்த இயகுநர் ரஞ்சித் ஜெயக்கொடி !

News, Tamil News
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி Third Eye Entertainment சார்பில் தயாராகும் பெயரிடப்படாத "Production No.1" படத்தின் படப்பிடிப்பை மிக விரைவாக முடித்திருக்கிறார். தனது தொழிலில் வித்தகராக இருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பருவ நிலை மாறுபாடுகள் கொண்ட சூழலிலும் ஊட்டியில் திட்டமிட்டபடி மிக விரைவாக படப்பிடிப்பை முடித்துள்ளார். இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியதாவது. படக்குழு அனைவரின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமனாது. ஒவ்வொருவரும் தங்களது முழு ஒத்துழைப்பையும் உழைப்பையும் தந்துள்ளார்கள். ஊட்டியில் மிகவும் பனிசூழ்ந்த சிரமமான  சுற்றுப்புற சூழலில் மிகுந்த கஷ்டத்திற்கு இடையே 30 நாட்கள் தொடர்ந்து படம்பிடித்தோம்.  கடும் பனிப்பொழிவில் நடிகர்கள் பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் இப்படப்பிடிப்பை முழுதாக முடித்து விட முடியுமா என  நான் சந்தேக மிகுதியில் இருந்தேன். ஆனால் அவர்களது அர்பணிப்ப...