Saturday, September 26SOCIAL MEDIA
Shadow

Day: January 26, 2020

லிங்கா திரைப்பட கதை விவகாரம் – உண்மை வென்றது !

லிங்கா திரைப்பட கதை விவகாரம் – உண்மை வென்றது !

News, Tamil News
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் , KS ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் 'லிங்கா' . இந்த படத்தை ராக்லைன் புரொடக்சன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார் . லிங்கா படத்தின் கதை, தனது 'முல்லை வனம் 999' படத்தின் கதை என்றும், எனது கதையைத் திருடி 'லிங்கா' படத்தை தயாரித்துள்ளனர். அதனால், 'லிங்கா' படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார் . இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தோம் .மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் 'லிங்கா' கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது. ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை ...
“83” திரைப்பட சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

“83” திரைப்பட சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

News, Tamil News
கிரிக்கெட் இந்திய தேசத்தின் ஆத்மா. ஜாதி, மத பேதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர் அனைவரையும் உணர்வால் ஒன்றிணைப்பது கிரிக்கெட். கிரிக்கெட் இந்தியாவில் அனைவரும் போகிக்கும் தனி மதம். கிரிக்கெட் வீரர்கள் இங்கே கடவுள். கிரிக்கெட்டை விரும்பாத ஒரு ஜீவனைக்கூட நீங்கள் இந்தியாவில் காணமுடியாது. 1983 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியா உலககோப்பையை வென்ற தருணம் இந்தியா முழுதும் எழுந்து நின்று ஆர்பரித்த வரலாற்றின் பொன்னான தருணம். ஒரு திரில்லர் படத்திற்கிணையான போராட்டத்தை நடத்தி, நம் அணி வீரர்கள் உலககோப்பயை வென்றார்கள். அப்போதைய கேபடன் கபில்தேவ் அவர்களின் வாழ்க்கை பின்னணியில் நம் அணி உலககோப்பையை வென்றதை மீட்டுருவாக்கம் செய்துள்ள படம் தான் "83". கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல், ரிலயன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து   இவ்வாண்டின் எதிர்பார்ப்பு மிக்க வெகு ...