'சிதம்பரம் ரயில்வே கேட்' - 1980களில் நடந்த உண்மை சம்பவம்
கிரவுன் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கும் படம் "சிதம்பரம் ரயில்வே கேட்". 1980ல் நடந்த உண்மை சம்பவத்தை மையக்கருவாக வைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் இயக்குனர் சிவபாவலன். உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள், இவர்களுக்குள் ஏற்படும் பகை, காதல் ஆகியவற்றை மிக எதார்த்தமாக பேசப்போகும் படம் சிதம்பரம் ரயில்வே கேட். 1980 களைப்போல சிதம்பரம் நகரம் மோகன் ஸ்டூடியோவில் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, ஏகாந்தம் படத்தில் நடித்த நீரஜா, காயத்ரி, ரேகா, சூப்பர் சுப்புராயன், பாலாசரவணனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை கார்த்திக்ராஜா, ஒளிப்பதிவு ஆர்.வேலு, சண்டை சூப்பர் சுப்புராயன், பாடல்கள் பிரியன், அருண் பாரதி, தயாரிப்பு மேற்பார்வை சுசி காமராஜ்.
சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் நடைபெறுகிறது.
Published on: 23 Oct 2018
For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube