மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து காயடிக்க வேண்டும் - பார்த்திபன் காட்டம்

Director Actor Parthiban

சென்னை, அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாற்றுத் திறனாளியான 12 வயது சிறுமிக்கு, 17 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகின்றது.

இந்த விஷயத்தில் தனது கோபத்தை டுவிட்டரில் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நடிகர் பார்த்திபன். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது...

அறுத்தெறியுங்கள்!!!
--------------------------------------
இந்த நிமிடம்
இதே மணிக்கு
இங்கோ அங்கோ எங்கோ
ஒரு பாலியல் வன் கொடுமை
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது ...
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய
நிகழ்வை பார்த்தபடி!!!
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர், ஈக்களாய் மொய்த்துக் கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே
நம் கண்களையும் காதுகளையும்
கூர்மையாக்கி, ___- க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!

என பதிவிட்டிருக்கிறார் பார்த்திபன்.

Published on: 19 July 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=