'சவரக்கத்தி' படத்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை - இயக்குநர் G.R. ஆதித்யா

Actress Poorna in Savarakkaththi Movie

முதலில் நான் பார்த்திபன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். மற்றும் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணி புரிந்துள்ளேன். ஆனால் பார்த்திபன் அவர்களிடம் சிறிய காலம் மட்டுமே ஒரு 6 மாதங்கள் மட்டுமே பணி செய்தேன். நான் இயக்குநராக வேண்டும் என்று தான் சினிமாவிற்கு வந்தேன். சவரக்கத்தி கதை "பார்பர்" கதாபாத்திரத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டது. "பார்பர்" கதாபத்திரத்தை வைத்து என்ன பண்ணலாம் என்று பேசி பேசி ஓரு சிறிய கதை களம் கிடைத்தது. இப்படத்தில் ஒருமுக்கிய நிகழ்வு ஓன்று நிகழும் அந்த நிகழ்வுக்கு பின்பு தான் படத்தின் கதை நகர தொடங்கும். இப்படத்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை. ஓரு பார்பர் கதாபாத்திரம் அவன் வாழ்க்கையில் ஓரு நாள் காலையில் 9 மணிமுதல் மாலை 6 மணி வரை நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் கதை நகரும். அந்த கடை தான் அவனுக்கு உலகம். செவ்வாய்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் சரக்கு அடித்து விட்டு நன்றாக தூங்குவான். இது தான் அவனது கதாபாத்திரம். அப்படி ஓரு சமயம் மிக பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொண்டு விடுகிறான். பின்பு எப்படி அவன் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டான் என்பது தான் மீதி கதை. இப்படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று முதலிலே முடிவு பண்ணிட்டேன். படத்தின் கதாநாயகி கதாபாத்திரதிற்காக பல பேரிடம் கதை கூறினேன். படத்தின் கதையில் 3 குழந்தைகளுக்கு தாயாக நடிக்க யாரும் முன்வரவில்லை. கடைசியாக பூர்ணா மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று உணர்ந்து ஒப்புக்கொண்டார். மிக சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்தப்படம் மொத்தமாக 45-48 நாட்களில் எடுக்கப்பட்டது. படத்தில் வரும் அணைத்து காட்சிகளும் சென்னையில் எடுக்கப்பட்டது. மக்களுக்கு இப்படத்தின் கதை ஓரு புதுவிதமான ஓரு அனுபவத்தை கண்டிப்பாக கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ராம், மிஷ்கினின் நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம். படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் ராம் அவர்களுக்கு காலில் அடிப்பட்டுவிட்டது இருந்தாலும் மிக சிறப்பாக நடித்து முடித்தார் என்றார் சவரக்கத்தி இயக்குநர் G.R. ஆதித்யா.

இதையும் படிங்க ...
Arrow Icon 'கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்' இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். – இயக்குநர் மிஷ்கின்
Arrow Icon சவரக்கத்தி படத்தில் 'பார்பர்' கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். – ராம்

"I wanted to change my route..." Director Myskkin

"Mysskin can entertain you like stand-up comedian" - Director Ram

Actress Poorna Interview talks about Savarakathi Movie.

"Savarakathi is set against the backdrops of a single day" - Director GR Aditya

"Music Director Arroll Corelli Interview about Savarakathi Movie.

Published on: 08 Feb 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=