விஷ்ணு விஷால் - பிரபு சாலமன் புது கூட்டணி !

Vishnu Vishal

விக்ரம் பிரபு – லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளியான 'கும்கி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூல் மழை பொழிந்தது.

தற்போது, இதன் இரண்டாம் பாகத்தை (கும்கி-2) பிரபு சாலமனே இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீரோ கதாபாத்திரத்தின் சிறு வயது ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கடந்த ஆண்டே (2017) தாய்லாந்தில் படமாக்கப்பட்டதாம்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. 'தெகிடி', 'சேதுபதி' போன்ற படங்களில் இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

வெகு விரைவில் படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: 26 May 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

 • Actress Eesha Rebba Stills height=
 • Actress Miya Rai Leone Stills height=
 • Actress Neha Sharma Stills height=
 • Actress Amy Jackson Stills height=
 • Actress Hirithika Stills height=
 • Actress Rashmika Mandanna Stills height=
 • Actress Disha Patani Stills height=
 • Actress Krisha Kurup Stills height=
 • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
 • Actress Manisha Yadav Stills height=
 • Actress Riya Mika Stills height=
 • Actress Aishwarya Menon Stills height=
 • Regina Cassandra Stills height=