இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் காந்தி ஜெயந்தி மேஜிக்கை அதே நாளில் நிகழ்த்தும் விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி

Director Gokul, Vijay Sethupathi and Sayyeshaa

சரியாக இதே நாளில் (அக்டோபர் 2) நான்கு வருடங்களுக்கு முன்பு, கோகுல் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமான காமெடிக் காட்சிகள் மூலம் 'சுமார் மூஞ்சி குமார்' ஆக பட்டிதொட்டியெங்கும் பரவலாகப் பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி. இப்போது மீண்டும் இதே தேதியில் (அக்டோபர் 2) தங்களது அடுத்த படமான 'ஜுங்கா' படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில் கைகோர்த்துள்ளது நடிகர ்விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் கூட்டணி. 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'வில் இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்திய காமெடி கதகளி ஆட்டம் இப்போதுவரை சோசியல் மீடியாவிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இப்போது இதே போன்றதொரு காமெடி மாயாஜாலத்தை நிகழ்த்த 'ஜுங்கா' மூலம் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இப்படத்திற்கான 30நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல்படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 2) பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது. 'வனமகன்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக அறிமுகமான சாயிஷா சாய்கல் 'ஜுங்கா' படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜாலி பாடல்களையும், மெலடி மெட்டுக்களையும் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'விற்காக உருவாக்கித் தந்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார்.

இதுவரை விஜய்சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகவுள்ளது 'ஜுங்கா' திரைப்படம். இப்படத்தை விஜய்சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால், படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படம்சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்துவிட்டது. படத்தின் பூஜை சமயத்திலேயே அப்படத்தின் வியாபாரங்கள் தொடங்குவது இதற்கு முன்பு சூப்பர்ஸ்டார ்ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமே நிகழ்ந்துள்ள அதிசயம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ அன்ட் பி குரூப்ஸ் இப்படத்தின் உரிமையை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் 'ஜுங்கா' படத்தில் நடிக்கிறார்கள். இவர்களின் கூட்டணியோடு விஜய்சேதுபதியின் 'கல கல' காமெடி எபிசோடுகளைப்பார்க்க இப்போது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பிலிருக்கின்றனர்.

Vijay Sethupathi-Gokul to recreate Gandhi Jayanthi magic after Idharkuthaane Aasaipattai Balakumara on same day

Four years exactly back, exactly on this date (October 2), we could see Vijay Sethupathi rushing towards the nook and corners for a quarter cutting in Idharkuthane Aasaipattai Balakumara. The hilarious and innocuous 'Sumaar Munji Kumaaru' desperately moving across city made us feel sympathetic but with a humorous punch. On this same date now, he will be making a swing of travel across the exotic locales of Paris. Yes, the most amusing trio combo Gokul-Vijay Sethupathi-Siddharth Vipin is coming together for the film 'Junga'. This team had entertained the audiences with unbeatably best hilarious entertainer IAB, which is still enjoyed and viewed on satellite and digital platforms.

Now they are keen on striking gold outperforming their previous spell with Junga. The shooting of this film commences from today in Paris with a 30-day schedule. Vanamagan fame Sayyeshaa Saigal has been signed to play the female lead role. Siddarth Vipin, who seasoned the film Idharkuthane Aasaipattai Balakumara with fun-filled tracks and melodious ones is back to score music.

Junga will be the ever biggest film with grandeur made in the career of Vijay Sethupathi till the date. While Vijay Sethupathi had felt the need to produce the film under his own home banner, it turned entire spotlights of K-Town overnight. The film has been sold for a big price even before the shooting had commenced. It all happened before couple of decades, where Rajinikanth movies would be sold during the time of Pooja itself.

A & P Groups has acquired the film's rights for a fancy price, which has left everyone in film industry on awestruck mode.

The film features many more prominent actors that include Yogi Babu, whose episodes with Vijay Sethupathi will leave theatres in unlimited laughter therapy.

Published on: 02 Oct 2017

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

 • Actress Miya Rai Leone Stills height=
 • Actress Neha Sharma Stills height=
 • Actress Amy Jackson Stills height=
 • Actress Hirithika Stills height=
 • Actress Rashmika Mandanna Stills height=
 • Actress Disha Patani Stills height=
 • Actress Krisha Kurup Stills height=
 • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
 • Actress Manisha Yadav Stills height=
 • Actress Riya Mika Stills height=
 • Actress Aishwarya Menon Stills height=
 • Regina Cassandra Stills height=
 • Actress Surbhi Stills height=