'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி
'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. [Download Viswasam Movie UHD Stills]
வரும் பொங்கலுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' உடன் 'விஸ்வாசம்' போட்டியிடுகிறது. அதனால் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்பில் உள்ளனர்.
நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
Published on: 07 Dec 2018
For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube