Amritha – An enchantment personified with elegance and potentials

Actress Amritha in Kaali Tamil Movie

Beyond talents and potentials, there is charisma that instantly lets everyone fall in love or enchanted with. Such illustrations are off rarity and Amritha distinctly becomes one among them. Her promising screen presence and praiseworthy performances in Padai Veeran gave a blunt impression that she might have either hailed from a film family background or at least someone who pursued training in acting school. But Amritha surprises us saying, "I am a graduate of B.Com and am the first generation in cinema from my family. Well, I had no theatre training, but had some short films, advertisements and albums that got me opportunity to play the female lead in Padai Veeran."

Amritha is so much exhilarated on sharing screen space with Vijay Antony in his upcoming film 'Kaali'. She says, "I have been a great admirer of Vijay Antony sir's music and his acting as well. But to see him so much calm and composed in spite of achieving great scales of success is completely astonishing. He is very friendly on the sets and in every shot we performed together; he never missed to compliment my performance. It was a kind of vigorous encouragement to improvise myself for best outputs, particularly during intimate scenes, where I was nervous.

On sharing the experience of working with filmmaker Kiruthiga Udhayanidhi, Amritha says, "Kiruthiga mam chose me to a part of Kaali after seeing me in the lyric video of Padai Veeran. She is such a sweet hearted person. To be precise, I was more comfortable working with a woman director for she helped me a lot in scenes that I wasn't comfortable with. Her incessant encouragements propelled me to perform better."

Filled with so much enthusiasms and aspirations to achieve bigger, Amritha says that Simran and Trisha are her role models. "I grew up watching their films and I was highly inspired. Simran madam is such a great actress that she proved her proficiency in every role she performed. Be it her amusing dance, emoting skills or the way she dedicatedly maintained her physique, she is amazing. It's same with actress Trisha, who has journeyed long years in showbiz and she remains unbeatable at top," signs off Amritha.

திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

Vijay Antony and Amritha in Kaali Tamil Movie

திறமை மற்றும் ஆற்றல் வளத்தை தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், "நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது" என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா.

மேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும்போது, "விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்து என்னை இன்னும் மெறுகேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் உதவுவார்" என்றார்.

படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் வேலை பார்த்த அனுபவத்தை பற்றி கூறும்போது, "படைவீரன் படத்தின் பாடல் வீடியோ ஒன்றை பார்த்து தான் கிருத்திகா மேடம் என்னை காளி படத்துக்காக தேர்ந்தெடுத்தார். மிகவும் இனிமையாவர், குறிப்பாக ஒரு பெண் இயக்குனர் படத்தில் வேலை பார்த்தது எனக்கு வசதியாக இருந்தது. நான் அசௌகரியமாக உணரும் காட்சிகளில் எனக்கு உதவியாக இருந்தார். அவருடைய தொடர்ச்சியான ஊக்கம் இன்னும் நன்றாக நடிக்க என்னை செலுத்தியது" என்றார்.

உற்சாகத்தோடும், நிறைய சாதிக்கும் கனவுகளோடும் இருக்கும் அம்ரிதா, "சிம்ரன், திரிஷா ஆகியோர் தான் என் ரோல் மாடல். அவர்களின் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன், அவர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன். சிம்ரன் ஒரு சிறந்த நடிகை, தான் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்தவர். அசத்தும் நடனம், எமோஷனல் நடிப்பு, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதாகட்டும் அனைத்திலும் சிறந்தவர். அதே மாதிரி தான் நடிகை திரிஷாவும், பல ஆண்டுகளாக நடிகையாக பயணித்து வந்தாலும் தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது அவரின் பெரும் சாதனை" என்றார்.

Published on: 02 April 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=