Saturday, September 26SOCIAL MEDIA
Shadow

Tamil News

பிரேக்கிங் நியூஸ் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

பிரேக்கிங் நியூஸ் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

News, Tamil News
ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) ஆக்க்ஷன் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.. ஜிகுனா படத்தை தயாரித்தவர் "திருக்கடல் உதயம்" இவர் தனது மூன்றாவது தயாரிப்பான  பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்களுக்கு Visual Effects துறையில் இருந்து பணியாற்றிய அண்ட்ரோ பாண்டியன் டைரக்ட்டு  செய்கிறார். இயக்குனர் கூறுகையில்: ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷ்ன் படம், மிக  பிரமாண்டமாக பொருள் செலவில் தயாராகிறது, இதில் சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக்  என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம் மற்றும் Visual Effects யின் பங்கு அதிகமாக உள்ளது என்பதால் பாதி படத்திற்கு மேல் Green மற்றும் Blue மேட்டிலேயே படமாக்கி  வருகிறோம், காதல், எமோஷன், சென்டிமெண்டுடன் கலந்த கமர்சிய...
“ஆபரேஷன் அரபைமா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், டினி டாம்!

“ஆபரேஷன் அரபைமா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், டினி டாம்!

News, Tamil News
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக வில்லன்கள் கொடி கட்டிப்பறந்திருக்கிறார்கள். அன்றைய நம்பியார், அசோகன், வீரப்பாவில் ஆரம்பித்து இன்றைய ரகுவரன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் வரை வில்லன் நடிகர்களுக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படி ரசிகர்கள் கொண்டாடப்போகும் ஒரு வில்லன் நடிகராக "ஆபரேஷன் அரபைமா" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், டினி டாம். பஞ்ச பாண்டவர், பட்டாளம், பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட், இன்டியன் ருபி, பியூட்டிஃபுல், ஸ்பிரிட் உள்பட பல மலையாளப்படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் டினி டாம், ஆபரேஷன் அரபைமா படத்தில் ரகுமானுக்கு வில்லனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிய "கலாபவன் மணி"யைப்போலவே கலாபவனிலிருந்து உருவான திறமையான நடிகர் மற்றும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் டினி டாம். எனவே ஆபரேஷன் அரபைமா படத...
இயக்குநராக மாறிய தனஞ்செயன் !

இயக்குநராக மாறிய தனஞ்செயன் !

News, Tamil News
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவரான தனஞ்செயன் தற்போது  புதியதோர் அத்தியாயத்திற்கு தயாராகியுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளராக ஆரம்பித்து சினிமாவின் ஒவ்வொரு பிரிவிலும் பயணித்து, இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருக்கும் தனஞ்செயன் தற்போது படைப்பாளி உலகில்  இணைந்து இயக்குநராக மாறியுள்ளார். BOFTA MEDIAWORKS & Creative Entertainers  சார்பில் பல நல்ல படங்கள் தயாரித்து வெளியிட்டு வரும் தனஞ்செயன் தனது இயக்குநர் அவதாரம் பற்றி கூறியதாவது ... நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது அப்படங்களின் கதை விவாதத்திலும், திரைக்கதை உருவாக்கத்திலும், பட உருவாக்கத்தின் பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளேன். படத்தின் வெற்றி தோல்விகள் மற்றும் அதில் கிடைத்த அனுபவங்கள் படத்தினை உருவாக்குவதில் நிறைய பாடங்களை கற்று தந்தது. BOFTA Film Institute ல் எனது பயணம் பல சினிமா...
எட்டுத்திக்கும் வெற்றி காணும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

எட்டுத்திக்கும் வெற்றி காணும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

News, Tamil News
திரைப்படத் தொழில் என்பது செழிப்பாக இருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் எடுக்கும் திரைப்படங்கள்  வெற்றி அடைந்து, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும். தங்கப் புதையல் வேட்டையைப்போல், ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் இந்த வெற்றியை நோக்கியே தங்கள் தயாரிப்பைத் தொடர்கின்றன. தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தொடர்ந்து தரும் வெற்றிகள் மூலம் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தை கவனிக்க வைத்திருக்கிறார். திருட்டு விசிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் திரையரங்கில் படம் ஓடும் காலத்தை குறைக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த 'கோமாளி' திரைப்படம், 80 நாட்களைக் கடந்து இன்னமும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு முறை ஓளிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உரிமைகளைத் தாண்டி இந்த வெற்றியை கோமாளி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வருண் மற்றும் சம...
மீண்டும் போலீஸ் வேடத்தில் அவதாரமெடுக்கும் அருண் விஜய்

மீண்டும் போலீஸ் வேடத்தில் அவதாரமெடுக்கும் அருண் விஜய்

Tamil News
தமிழ் சினிமாவில் சமீபமாக  வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு "சினம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும்  வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம்  குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு. சினம் எனும் வலிமை மிகுந்த  தலைப்பு பற்றி அருண் விஜய் கூறியதாவது... எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும்  கோபம்  எனும் பண்பு எதிர்மறையானதாகவே  அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம் அப்பாடியானதொன்று அல்ல. பலநேரத்தில் கோபமானது பல  விசயங்கள...
நிறைவடைந்தது ‘ஓ மை கடவுளே’ படப்பிடிப்பு!

நிறைவடைந்தது ‘ஓ மை கடவுளே’ படப்பிடிப்பு!

Tamil News
நகைச்சுவை கலந்த காதல் சித்திரமான 'ஓ மை கடவுளே' தென்றல் காற்றைப்போல் மனதுக்கு இதமான அனுபவத்தைத் தரத் தயாராகிறது. அசோக் செல்வன் ரித்விகா சிங் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் வெகுஜன ரசனைக்கேற்ப அமைந்து அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் டில்லிபாபு இது பற்றி கூறுகையில் "ஓ மை கடவுளே படத்தில் பங்கு பெற்ற துடிப்பு மிக்க இளைஞர் குழு துவக்கத்திலிருந்தே என்னை திருப்திபடுத்தத் தவறவில்லை. இயக்குநர் அஸ்வத்தின் புதுமையான கதை சொல்லும் முறையாகட்டும், அல்லது டீஸரில் தென்பட்ட பிரதான பாத்திரங்களான அசோக் செல்வன், ரித்விகா சிங் மற்றும் வாணி போஜனின் நளினமானமாகட்டும் அனைத்தும் நேர்மறையாகவே அமைந்திருக்கின்றன. ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ...
லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” !

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” !

Tamil News
தமிழின் பல்துறை வல்லமைகளில் ஒருவராக போற்றபடுபவர் லக்‌ஷ்மி  ராமகிருஷணன். இணையம், தொலைக்காட்சி, திரைகளில் நடிப்பால் மட்டுமன்றி, சொல்வெதெல்லாம் உண்மை போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கியது, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். அவரது சமீபத்திய படமான "ஹவுஸ் ஓனர்" தமிழ் ரசிகர்கள் கடந்து உலகெங்கும் அங்கீகாரம் பெற்று வருகிறது. இந்திய தேசிய திரைப்படவிழா 2019 ல் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இணைய யூடுயூப் தளத்தில், வாழ்வில் கொடுமைகளை சந்தித்து  வாழ்வில் மாற்றக் வேண்டி நிற்கும்  மனிதர்களை சந்தித்து உதவி வழங்கும் "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ" நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவுள்ளார். இது குறித்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது.... முதலில் பல்துறைகளிலும் என் வேலைகள் அனைத்தையும் கவனித்து, பாராட்டி ஆதரவளிக்கும் அனைவ...
ஹரீஷ் கல்யாணின் படத்தில் அனிருத் குரலில் துள்ளலான மெலடி !

ஹரீஷ் கல்யாணின் படத்தில் அனிருத் குரலில் துள்ளலான மெலடி !

Tamil News
இன்றைய தமிழ் சினிமா இசை உலகின் இளமை அடையாளமாக வெற்றி நாயகனாக வலம் வருபவர் அனிருத். தொடர் ஹிட் ஆல்பங்களை தந்துவரும் அவர் தன் குரல் மூலமும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இளம் தலைமுறையினர் அவர் குரலினை கொண்டாடி வருகின்றனர். மெலடி, ராப் என எந்தவகை இசைக்கும் ஒத்துப்போகக் கூடிய குரல் அவருடையது. அவர் குரல் உலகம் முழுதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியதாய் இருக்கிறது. தற்போது அனிருத் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கும் ஹரீஷ் கல்யாணின் "தனுசு ராசி நேயர்களே" படத்தில் ஒரு இளமை துள்ளும் பெப்பி மெலடி ஒன்றை பாடியிருக்கிறார். இது பற்றி இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது... கொண்டாட்டம், குத்துப்பாடல், காதல் பாடல், சோகப்பாடல் என எந்த ஒரு சூழலை எடுத்துக்கொண்டாலும் அனிருத் அங்கே  பொருந்தக்கூடிய திடகாத்திர குரல் கொண்டவராக இருக்கிறார். அவர் தன் குரலால் பாடல் வரிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி பாடலை அடுத்த நிலைக்கு...
சிபிராஜின் படத்தில் பூஜா குமார்!

சிபிராஜின் படத்தில் பூஜா குமார்!

Tamil News
கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் 'கபடதாரி' படத்தின் டைட்டிலில் துவங்கி, நடிக்கும் நடிக நடிகையர், பங்கேற்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் படம் பற்றிய எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதோ இந்த வரிசையில் இப்போது இன்னும் ஒரு செய்தி. 'விஸ்வரூபம்' படப்புகழ் பூஜா குமார் 'கபடதாரி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளரான டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இது குறித்து தெரிவிக்கையில், 'கபடதாரி' படத்தில் பூஜா குமார் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், படத்தின் தீவிர தன்மையை மேலும் அதிகப்படுத்துகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரம் கதையை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உயர...
முகேஷ் பிலிம்ஸ் வெளியிடுகிறது “பட்லர் பாலு”

முகேஷ் பிலிம்ஸ் வெளியிடுகிறது “பட்லர் பாலு”

Tamil News
காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும் இணைந்துள்ளார். மற்றும் மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையள் காரர் வேடம். எப்படி நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபுவிற்கு இந்த " பட்லர்பாலு " படம் அமையும் என்கிறார்கள். இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்ற சமையல் வேலைக்காக சென்ற திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்துவிடுகிறது.போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பதை ஒரு இர...
நவம்பர் 8 ம் தேதி வெளியாகிறது  ” தவம் “

நவம்பர் 8 ம் தேதி வெளியாகிறது ” தவம் “

Tamil News
இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரித்திருக்கும் புதிய படம் " தவம் " இந்தப்படத்தில் இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புதுமுகம் வசி நடித்துள்ளார், நாயகியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார் மற்றும் அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - வேல்முருகன் இசை - ஸ்ரீகாந்த் தேவா பாடல்கள் - இந்துமதி, எழில்வேந்தன், கோவிந்த் கலை - ராஜு எடிட்டிங் - எஸ்.பி.அகமது நடனம் - ரவிதேவ் ஸ்டண்ட் - ஆக்ஷன் பிரகாஷ் தயாரிப்பு மேற்பார்வை - குமரவேல்,சரவணன் தயாரிப்பு - வசி ஆஸிப் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆர்.விஜயானந்த் - ஏ.ஆர்.சூரியன் விவசாயத்தை காத்து ...