Viswasam : Ajith Kumar's MASS introduction Scene - DOP Vetri Reveals

Viswasam Cinematographer Vetri

When we come across the cinematic terms like 'Festival film', we are obviously taken to the zone of colourful visuals and the magician behind the lens. In all such stronger possibilities, cinematographer Vetri has been holding a decorous position under spotlights for presenting a colourful trailer of Ajith Kumar starrer Viswasam. While the trailer comprises of so many mass moments, Vetri reveals what was the most challenging part in this film.

"Of course, the introduction scene of Ajith sir was the most challenging thing. It happens that every filmmaker working with him would give different introduction scenes that have massy and classy appeals. However, when it comes to Siva, the situations were entirely different as he has already worked with him in three films. So we had to go through lots of discussions with the team to try something different in Viswasam," says Vetri. With a much curious desire, we tend to get something more interesting about Ajith Kumar's introduction and he says, "For the moment I can say is that it will be a worthy treat for fans and audiences. This drama involving the way everyone waits for him, his arrival and what he does after it will involve enjoyable moments."

When it comes to trio combo of Ajith Kumar-Siva-Vetri, 'Theatre Moments' become the top priority of fans. In this regards, Vetri opines, "Yes, there are lots of theatre moments in the film for fans to whistle and celebrate. But as far as I have seen, it's been a long time that Ajith sir had essayed such an entertaining role in the past 10-12 years. Even when it comes to our previous films – Veeram, Vedalam and Vivegam, his roles were sketched with seriousness. Whereas Viswasam will have him unleashing the entertainer avatar, where fans will have a blast and general audiences will love him.He had also displayed his emotional angle to such an extent that iam very sure the audience will feel connected to the protagonist "Thookku Durai" emotionally too.

As the story is set against both urban and rural backdrops, cinematographer Vetri emphasizes an interesting fact. "Since, the story is placed in two different backdrops, we have used different colour scheme. When it comes to action sequences, the most challenging part was the rain episode and I believe audiences will enjoy it."

Sathya Jyothi Films has bankrolled Viswasam featuring Ajith Kumar and Nayanthara in lead roles. With D Imman's musical chartbuster and scintillating trailer already capturing the spotlights, the film is scheduled for worldwide release on January 10.

'திருவிழா படம்' போன்ற சினிமா வார்த்தைகளை நாம் காணும்போது, வண்ணமயமான காட்சியமைப்புகள் மற்றும் அந்த மாயாஜால வித்தைக்காரரான ஒளிப்பதிவாளரை நினைவு கூர்வோம். அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் வண்ணமயமான டிரெய்லரை வழங்கிய ஒளிப்பதிவாளர் வெற்றி அத்தகைய பாராட்டுக்களுக்கு மிகவும் தகுதியானவர். டிரெய்லர் பல மாஸான தருணங்களைக் கொண்டிருந்தாலும், இந்த படத்தில் மிகவும் சவாலான பகுதியாக வெற்றி கருதும் விஷயங்களை வெளிப்படுத்துகிறார்.

"நிச்சயமாக, அஜித் சார் அறிமுகம் காட்சி மிகவும் சவாலான விஷயம். அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு இயக்குனரும் வித்தியாசமான அறிமுக காட்சிகளை வழங்குவார்கள். இருப்பினும், இயக்குனர் சிவா என்று வரும் போது அது முற்றிலும் வித்தியாசமானது. எனென்றால் அவருடன் ஏற்கனவே மூன்று படங்களில் பணிபுரிந்தவர். எனவே விஸ்வாசத்தில் வித்தியாசமாக ஏதாவது ஒரு முயற்சியை செய்ய நாங்கள் நிறைய விவாதித்தோம்" என்கிறார் வெற்றி. அஜித்குமாரின் அறிமுக காட்சியை மிகவும் ஆர்வத்துடன் செய்திருக்கிறோம். ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று நான் இந்த தருணத்தில் கூறிக் கொள்கிறேன். எல்லோரும் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் அவரின் வருகையும், வந்து அவர் என்ன செய்கிறார் என்பதும் ரசிக்கும் விதத்தில் இருக்கும்" என்றார் வெற்றி.

அஜித்குமார் - சிவா - வெற்றி இந்த மூவர் கூட்டணி என்று வந்தாலே 'தியேட்டர் தருணங்கள்' தான் ரசிகர்களின் முன்னுரிமை. இது குறித்து வெற்றி கூறும்போது, "ஆம், ரசிகர்கள் கொண்டாட, விசில் அடிக்க படத்தில் நிறைய தருணங்கள் உள்ளன. அஜித் சார் இது போன்ற ஒரு பொழுதுபோக்கு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து 10-12 வருடங்கள் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். வீரம், வேதாளம், விவேகம் என அவரின் முந்தைய படங்களில் கூட, அவரது கதாபாத்திரங்கள் தீவிரத்தன்மையுடன் இருக்கும். ஆனால், விஸ்வாசம் படம் அவரின் எண்டர்டெயினர் அவதாரத்தை முழுமையாக வெளிக் கொண்டு வரும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மிகவும் விரும்புவார்கள். அதேபோல அவரது எமோஷனல் கோணத்தையும் பெரிய அளவில் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார். "தூக்குதுரை" கதாபாத்திரத்துடன் ரசிகர்கள் எமோஷனலாக ஒன்றி விடுவார்கள்" என்றார்.

கதை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு பின்னணியிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் வெற்றி இது பற்றிய சுவாரஸ்யமான உண்மையை கூறும்போது, "கதை இரண்டு வேறுபட்ட பின்னணியில் நடப்பதால் நாங்கள் இருவேறு கலர் டோன் பயன்படுத்தியிருக்கிறோம். சண்டைக்காட்சிகளைப் பொறுத்தவரையில், மழை எபிசோடு மிகவும் சவாலான பகுதியாக இருந்தது. பார்வையாளர்கள் அதனை மிகவும் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்" என்றார்.

அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டி இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து, எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கிறது. ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது விஸ்வாசம்.

Published on: 07 Jan 2019

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Eesha Rebba Stills height=
  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=