தளபதி விஜய் பாடிய “ஒரு குட்டி கதை ” பாடல் வெளியானது !

மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய  படத்தொகுப்பினை பிலோமின் ராஜ்  கவனிக்கிறார்  .

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் ,அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன், கௌரி கிஷான்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் .

அனிரூத் இசையில் தளபதி விஜய் குரலில் ” ஒரு குட்டி கதை ” என தொடங்கும் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் , இந்த பாடலுக்கு அருண் ராஜா காமராஜ் வரிகளை எழுதியுள்ளார் .பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு இப்பாடலின் லிரிக் வீடியோவை  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் .

இதற்கு முன்பு கத்தி படத்தில் அனிருத் இசையில் செல்பி புள்ள பாடலை தளபதி விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் 2020  ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: