Pattarai Movie speaks about Safety and Protection of Women

Pattarai Movie speaks about Safety and Protection of Women

Safeguarding the women has become the staunch need of hour, where the contemporary crisis has turned out to be a much speculative one.Social consious directors mark their presence in registering their respect for women by making films that have emphasized the values of women empowerment and feminisms, but what remains to be an untouched panorama is the 'Safety and Protection of women'. Filmmaker Peter Alvin, former assistant to most celebrated moviemaker KV Anand spearheads distinctly with this conceptualization through his film 'Pattarai'.

"We often talk about the values of women; we celebrate them through the form of heavenly deities. Lots of inspiring talks and what not? Every showpiece that carries such theme to an extent. But in reality, how effectively we have educated our girl children at home about their safety measures. We have enabled them to completely incline to art and household. Of course, they have been imparted a freedom to accomplish their dreams in professional stature as well. But then, they still remain feeble and victimized to the carnivorous people. Pattarai will showcase on such a theme of how well a woman at home can be transformed into super-women," says filmmaker Peter Alvin.

He furthermore adds, "Soon after crafting the script and its characterizations, the earnest and most difficult thing was to finalize the actors who would breathe more life into the roles. Absolutely, we feel gleeful on getting actors like JD Chakravarthy," who continues to add that almost all the newcomers in the star-cast went through training at theatre workshops. Comedy actor Senthil will be seen in an unconventional role for the first time, which will not have any hilarious shades. Others in the star-cast includes Renuka, Dikshana, Jagadesh, Danapal, Ranjan, Elizabeth, Satish, Sanjeev and Karthik followed by lots of prominence given to Transgender actors playing important roles in second half .

Devan Ekambaram is composing songs to the lyrical essence of Palani Bharathi, Muthamizh and Ramesh with SS Moorthy taking care of art department and Raju K Antony on designs.

The film has three cinematographers - Mukesh, Arul Vincent and Vinoth Bharathy with vetran V.T. Vijayan getting onboard as editor along with T.S. Jai. The most celebrated Dilip Suburayan & Dinesh Suburayan will choreograph stunts with Peter Alvin wielding the megaphone apart from penning script and producing it.

பெண்களின் பாதுகாப்பு' பற்றி பேசும் 'பட்டறை'

பெண்களை காப்பது என்பது இப்போதைய முக்கிய தேவையாகி விட்டது. சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்த நெருக்கடியை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. சமூகத்தின் மீதான அக்கறை உடைய இயக்குனர்கள் பெண்கள் மீதான தங்கள் மரியாதைகளை பதிவு செய்து வருகிறார்கள். பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை மதிக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும், 'பெண்களின் பாதுகாப்பு' பற்றி பேசும் படங்கள் குறைவு தான். இயக்குனர் கேவி ஆனந்தின் முன்னாள் உதவியாளர், இயக்குனர் பீட்டர் ஆல்வின், 'பட்டறை' மூலம் இந்த கருத்துக்களை தெளிவாக பேச முன்வந்திருக்கிறார்.

"நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறோம்; நாம் அவர்களை தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக, அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பட்டறை சொல்லும்" என்கிறார் இயக்குனர் பீட்டர் ஆல்வின்.

அவர் மேலும் கூறும்போது, "கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்" என்றார்.

ரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்கள்.

முகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய, வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

Published on: 18 Aug 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=
  • Actress Amritha Aiyer Stills height=
  • Actress Anjali Stills height=
  • Athulya Ravi Stills height=