படப்பிடிப்பை முடித்த இயகுநர் ரஞ்சித் ஜெயக்கொடி !

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி Third Eye Entertainment சார்பில் தயாராகும் பெயரிடப்படாத “Production No.1” படத்தின் படப்பிடிப்பை மிக விரைவாக முடித்திருக்கிறார். தனது தொழிலில் வித்தகராக இருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பருவ நிலை மாறுபாடுகள் கொண்ட சூழலிலும் ஊட்டியில் திட்டமிட்டபடி மிக விரைவாக படப்பிடிப்பை முடித்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியதாவது. படக்குழு அனைவரின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமனாது. ஒவ்வொருவரும் தங்களது முழு ஒத்துழைப்பையும் உழைப்பையும் தந்துள்ளார்கள். ஊட்டியில் மிகவும் பனிசூழ்ந்த சிரமமான  சுற்றுப்புற சூழலில் மிகுந்த கஷ்டத்திற்கு இடையே 30 நாட்கள் தொடர்ந்து படம்பிடித்தோம்.  கடும் பனிப்பொழிவில் நடிகர்கள் பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் இப்படப்பிடிப்பை முழுதாக முடித்து விட முடியுமா என  நான் சந்தேக மிகுதியில் இருந்தேன். ஆனால் அவர்களது அர்பணிப்பும் படத்தின் மீது அவர்களது காதலும் பிரமிக்கும்படி இருந்தது. சிறுமுகச்சுழிப்பு கூட இல்லாமல் இருவரும் மிகக்கடுமையாக உழைத்தார்கள். ஒளிப்பதிவாளர் கவின் ராஜ் மிக முக்கியமாக குறிப்பிடபட வேண்டியவர். அவரும் அவரது குழுவும் இல்லையெனில் இப்படப்பிடிப்பு சாத்தியமாகியிருக்காது. எங்களுக்கு பல்வேறு தடங்கல்கள் நேர்ந்தது. ஊட்டி மாதிரியான  இடத்தில் திடீரெனெ சூரிய ஒளி பிரச்சனைகள் ஏற்படும். இம்மாதிரி பல்வேறு பிரச்சனைகளில் தயாரிப்பு குழுவின் ஆதரவு அற்புதமாக இருந்தது. அனைவரது அர்பணிப்பான உழைப்பால் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிக்கப்பட்டது.  என்றார்.


இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை அவர்கள் அதை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சகோதரிகளாக பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. Third Eye Entertainment சார்பில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: