உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் “சைக்கோ” படம் இந்தாண்டின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குரிய  படமாக உருவாகியுள்ளது. சென்சார் ஃபோர்ட் “சைக்கோ” படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம். உலகெங்கும் 2020 ஜனவரி 24 முதல் “சைக்கோ” படம் வெளியாவதாக அறிவித்துள்ளார்.

Double Meaning Production சார்பில் “சைக்கோ” படத்தை தயாரிக்கும் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது…. இந்த மிக குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் “சைக்கோ” திரைப்படம் எனக்கு கிடைத்த பரிசாகவே நினைக்கிறேன். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இது ஒரு அற்புதமாகவே நிலைத்திருக்கிறது.

இயக்குநர் மிஷ்கினின் திறமையான எழுத்து மற்றும் மேதமையான  இயக்கம், வெகு திறமையான நடிகர்களான உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோரின் வித்தியாசமான அவதாரம் என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் படத்தின்பால் பெரும் எதிர்ப்பார்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது. நான் இந்நேரத்தில் எங்களது கடின உழைப்பு மற்றும் படத்தின் உண்மையான கருத்தாக்கத்தை புரிந்துகொண்டு எங்களது  சைக்கோ டைட்டிலை அனுமதித்ததற்கு CBFC சென்சார் ஃபோர்ட் உறுப்பினர்களுக்கு எனது மிகப்பெரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது “சைக்கோ” படத்தினை இந்திய முழுதும் பன்மொழிகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம். இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் விதமும் படத்தின் நேர்த்தியும் மொழிகடந்து உலகமுழுதும் அனைத்து ரசிகர்களையுமே ஆச்சர்யபடுத்தும். வரும் 2020 ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் மிகப்பிரமாண்டமாக  வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இது  Double Meaning Production நிறுவனத்தின் முதல் மிகப்பெரிய வெளியீடாக இருக்கும்.

ஒரு பார்வையாளனாக “சைக்கோ” படத்தை பார்த்த பொழுது  எனக்கு ஒரு மாபெரும் அனுபவத்தை அளித்தது இந்தத்திரைப்படம். ரசிகர்களை இப்படம் பல அடுக்குகளுக்கு இழுத்து சென்று,  இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் திரில் பயண்மாக இருக்கும். அதே நேரத்தில் இயக்குநர் மிஷ்கின் முத்திரையான உணர்வுகளை ஆட்கொள்ளும் திரை அனுபவமும் இப்படத்தில் இருக்கும். இசைஞானி இளையாராஜாவின் உயிர் உருக்கும் இசையில் இத்திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரு மாறுபட்ட திரைஅனுபவமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: