Friday, May 14SOCIAL MEDIA
Shadow

ஒரே வருடத்தில் ரிலீஸாகும் 4 படங்கள் – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

danush

மசாலா மற்றும் நடிப்பிற்கு தீனி போடும் கதையம்சம் கொண்ட படம் என வருஷத்திற்கு 2 படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகும். கடந்த வருடம் அசுரனும், பட்டாசும் வெளியானது.

இந்த வருடம் 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ கடந்த வருடமே முடிந்துவிட்டது. ஆனால், கொரொனா காரணமாக வெளியாகவில்லை. எனவே, இப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

அதேபோல், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த

‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

மேலும், பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. எனவே, இந்த 2 படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. எனவே, தனுஷ் நடிப்பில் இந்த வருடம் 4 திரைப்படங்கள் வெளியாவது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.