web analytics
Wednesday, December 7SOCIAL MEDIA

பயிற்சிக்கு 400 காளைகள்… வாடிவாசலுக்கு தயாராகும் சூர்யா…. பரபர அப்டேட்…..

vaadivaasal

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பின் பாலா இயக்கத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் ஒரே நேரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பாலா படத்தில் ஜோதிகா, அதர்வா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலரும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அதேபோல், ஒருபக்கம் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்கும் சூர்யா தயாராகி வருகிறது.

வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டை மையாமாக கொண்டு உருவாகும் திரைப்படமாகும். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சி எடுக்கவுள்ளார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் மதுரை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் துவங்கவுள்ளது. இதற்காக 400க்கும் மேற்பட்ட காளை மாடுகளை காங்கேயம், சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

%d bloggers like this: