web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

சல்லி சல்லியா நொறுக்கிட்டானுங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் காப்பியா?…

ayirathil oruvan

கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்து செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் சோழர் பரம்பரை பற்றியதாக இருந்ததால் ரசிகர்களுக்கு வித்தியாசமான, புதுமையான அனுபவத்தை கொடுத்தது.

இந்நிலையில், 10 வருடங்களுக்கு பின் இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதில், தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த செய்தியை செல்வராகவனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது தொடர்பாக செல்வராகவன் வெளியிட்டுள்ள போஸ்டர் Mathieu lauffrary என்கிற புத்தக அட்டைப்படம் போல உருவாக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் செல்வராகவனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

%d bloggers like this: