சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆரி. பிக்பாஸ் போட்டியில் பல பிரச்சனைகளை தாண்டி முதல் பரிசையும் வென்றார்.
நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என்னுடைய எல்லா பிறந்தநாளுக்கும் குடும்பத்தினரும், நண்பர்களும் வாழ்த்து சொல்வார்கள். ஆனால், இந்த பிறந்தநாள் சிறப்பாக அமைந்தது. ஏனெனில், உலகத்தின் பல இடத்திலிருந்தும் எனக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதை என் வாழில் மறக்கவே முடியாது’ என பதிவிட்டுள்ளார்.
மேலும் ‘உங்கள் வீட்டு பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக ஏற்றுக்கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறிய உலகெங்கும் உள்ள அன்பு சொந்தங்களுக்கு, என் முதல் வணக்கம்’ என உருகியுள்ளார் ஆரி.