நடிகர் அஜித்துக்கு நடிப்பு என்பது வெறும் தொழில் மட்டுமே. பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது, பை,கார் ரேஸ்களில் கலந்து கொள்வது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டார்களை இயக்குவது என பலவற்றிலும் ஆர்வம் உடையவர்.
படப்பிடிப்புக்கு இடையில் நேரம் கிடைத்தால் பைக்கை எடுத்துக்கொண்டு ஒரு லாங் டிரைவ் செய்வது அஜித்துக்கு பிடித்தமான ஒன்றாகும்.
தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், புனே பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அஜித் லண்டன் கிளம்பி சென்றார். ஆனால், அவர் எதற்காக அங்கு சென்றார் என்கிற காரணம் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், ஜாலியாக பைக் ஓட்டத்தான் சென்றிருக்கார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.