web analytics
Wednesday, February 1SOCIAL MEDIA

பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

ajith

வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராம் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போன்ற செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார்.

ajith

அஜித்தின் புதிய கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது அஜித்தின் 61வது திரைப்படமாகும்.

இந்நிலையில், அஜித் 61 பட கெட்டப்பில் அஜித்துடன் நடிகர் ஆதி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ajith