மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஐய்யப்பனும் கோஷியும் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அனில் நெடுமாங்கட். இப்படத்தில் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

anil nedumangad

இவர் தற்போது பீஸ் என்கிற படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு முடிந்த பின் நண்பர்களுடன் அருகில் இருந்த மலங்கரா அணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீட்க நண்பர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே, அவர் தண்ணீரிலேயே உயிரிழந்துவிட்டார். இவருக்கு தற்போது வயது 48. இவரின் மரணம் மலையாள திரையுலகில் சோகத்தையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.