ஆங்கிலத்தில் ஸ்டாண்டட் காமெடி செய்து வந்தவர் கார்த்திக். பொய் சொல்லப்போறோம், கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
ரேடியோ தொகுப்பாளினி சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது நடிகை அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அம்ருதா மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். சில வெப் சீரியஸ்களிலும், ‘லீகலி ரேப்ட்’ போன்ற சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு, கார்த்திக் இயக்கனராக அவதாரம் எடுக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கே. பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.