web analytics
Monday, August 8SOCIAL MEDIA

மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் நடிகர் கவின்….இது செம அப்டேட்!..

சதுரங்க வேட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். அதன்பின், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை எடுத்தார். அப்படத்திற்கு பின் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். இப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ஹெச்.வினோத் மாறினார்.

அஜித்தை வைத்து அவர் இயக்கிய வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இப்படத்திற்கு பின்பும் போனிகபூர்- அஜித்- ஹெச்.வினோத் டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இதற்கு செட் அமைக்கும் பணி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. மங்காத்தா, பில்லா போல் அஜித்துக்கு நெகட்டிவ் ரோல் என வினோத்தே கூறியிருந்தார்.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் தபு ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது இப்படத்தில் பிக்பாஸ் கவின் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் கவினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

%d bloggers like this: