poo ramu

சசி இயக்கிய பூ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமு. அதன்பின் அவர் பூ ராமு எனவே அழைக்கப்பட்டார். அதன்பின் தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

இந்நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு திரையுலகினருக்கு

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.