தமிழகம் எங்கும் பல கிளைகளை கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை அதிபர் சரவணா அருள் விளம்பர படங்களில் நடித்து வந்தார். திடீரென தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அதே இடத்தில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, ரஜினியை சரவணா சந்தித்து பேசும் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.