நடிகர் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் சிம்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாடு மாஸ் ஹிட்டுக்கு பின் இப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரைக்கும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு பின் பத்து தல என்கிற படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.
இந்நிலையில்,தாடி, கூலிங் கிளாஸ், ஜெர்க்கின் அணிந்து அசத்தலாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை சிம்பு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.