தமிழ் சினிமாவில் எப்போதும் செய்திகளில் அடிபடும் நடிகராக இருப்பவர் சிம்பு. இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஒருபக்கம், நடிகை நித்தி அகர்வாலுடன் அவருக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே மாறினார்.
இப்படம் முடிந்தபின் அடுத்து ‘பத்து தல’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் சிம்புவை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அதில், வெள்ளை நிற சட்டை மற்றும் ஓவர் கோட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்து சிம்பு அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை சிம்புவே டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.