sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து டான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருப்பார் என கருதப்படுகிறது. ஆனால்,இதுவரை வெளிவந்த எந்த போஸ்டரிலும் அவரின் புகைப்படம் இடம் பெறவில்லை. ஒரே ஒரு புகைப்படம் மட்டும் வெளியானது. எஸ்.ஜே.சூர்யா இருக்கையில் அமர்ந்திருப்பது போலவும், அவரின் பின்னால் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நின்று கொண்டிருப்பது போல ஒரு அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

don

ஆனால், நான்தான் ஹீரோ.. போஸ்டரில் என்னை விட அவருக்கு என்ன முக்கியத்துவம்?.. அதை வெளியிட வேண்டாம் என தடை போட்டுவிட்டாராம் சிவகார்த்திகேயன். மாநாடு படத்திற்கு பின் எஸ்.ஜே சூர்யாவின் மவுசு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால், இதைபுரிந்து கொள்ளாமல் சிவகார்த்திகேயன் இப்படை நடந்து கொள்கிறாரே என படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.