Saturday, April 10SOCIAL MEDIA
Shadow

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி..

நடிகர் சூர்யா தான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்’ என பதிவிட்டுள்ளார்.

சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.