web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

பாலா – சூர்யா படம் எப்போது ஷூட்டிங்? – பரபர அப்டேட்

bala

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா விரும்பி நடித்த திரைப்படம் நந்தா. அதன்பின் பிதா மகன் படத்திலும் நடித்திருந்தார். சூர்யாவை கலகலவென பேச வைத்தவர் பாலாதான். சூர்யாவின் உடல் மொழி மற்றும் பேசும் ஸ்டைல் அனைத்திற்கும் பாலா ஒரு முக்கிய காரணம்.

ஆனால், பிதாமகனுக்கு பின் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவில்லை. தற்போது அதற்கான காலம் கூடி வந்துள்ளது. ஆம். பாலாவும், சூர்யாவும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் சூர்யா இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். சூர்யாவுக்கு இப்படத்தில் இரட்டை வேடம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்திற்காக 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா. ஒருபக்கம் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4ம் தேதி வெளியாகவுள்ளது.

%d bloggers like this: