suriya

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சூர்யா. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த படம் என விமர்சகர்களும் கொண்டாடினர்.

இந்நிலையில், சமீபத்தில் சூர்யாவின் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரசிகர் ஹரி ராஜின் திருமணம் நடைபெற்றது. அவரின் திருமணத்தில் கலந்து கொண்ட சூர்யா தாலி எடுத்து கொடுத்து அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.