நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் பாப்பா காலமானார். 87 வயதான அவர், மதுரை விரகனூரில் உள்ள குடும்ப வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வயது மூப்பு காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 18ஆம் தேதி இரவு அவர் தனது இறுதி மூச்சை விட்டுள்ளார். இன்று மாலை நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வடிவேலு தனது சொந்த ஊருக்கு விரைந்தார். தனது தாயுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் மூத்த நடிகர் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாப்பாவின் மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வடிவேலுவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன.