vijay

கன்னடத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவருக்கென அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

vijay

நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரின் மரணம் கன்னட திரையுலகத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, அவருக்கு கன்னடம், தெலுங்கு , தமிழ் நடிகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சிலர், அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

vijay

இந்நிலையில், நடிகர் விஜய் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vijay