web analytics
Tuesday, July 5SOCIAL MEDIA

பீஸ்ட் நெகட்டிவ் கமெண்ட்ஸ்…நெல்சனுக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி!…

nelson

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது.

நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது.

இதைத்தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பே நெல்சனுக்கு இழுபறியாக இருக்கிறது எனக்கூறப்படுகிறது. ரஜினிதான் அதை முடிவு செய்வார்.

இந்நிலையில், நெல்சனை அழைத்த விஜய் ‘எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் மீண்டும் இணைந்து ஒரு படம் செய்வோம்’ என ஆறுதலாக பேசியுள்ளாராம்.

வழக்கமாக சினிமாவில் இப்படி சொன்னாலும், விஜய் அதை நிறைவேறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

%d bloggers like this: