தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருக்கு ரூ.10 முதல் 15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பாலிவுட்டில் ஒரு வெப் சீரியஸில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில், சாகித் கபூர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ராஜ் மற்றும் டீகே என இருவர் இந்த வெப் சீரியஸை தயாரித்து வருகின்றனர். இத்தொடரை அமேசான் பிரைம் நிறுவனமே தயாரித்து வருகிறது.
இப்படத்திற்கு விஜய் சேதுபதிக்கு ரூ.55 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் சாகித் கபூருக்கு வெறும் ரூ.40 கோடி சம்பளம்தானாம்.
விஜய் சேதுபதி காட்டில் அட மழைதான்!…