vijay

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தளபதி என அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் விஜய். அவரின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜய்க்கு சஞ்சய் என ஒரு மகன் இருக்கிறார். இவரின் புகைப்படங்கள் ஏற்கனவே பல முறை வெளியாகியிருக்கிறது. தற்போது அவர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று சன் டிவியில் இயக்குனர் நெல்சனுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். அப்போது நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு விஜய் பதில் கூறினார்.

alponse

உங்கள் மகன் சஞ்சய்க்கு நடிக்க ஆர்வமிருக்கிறதா? இல்லை அவருக்கு எதில் ஆர்வம் என நெல்சன் கேள்வி கேட்டார். இதற்கு பதில் கூறிய விஜய் ‘ஒருமுறை பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னிடம் ஒரு கதையை கூற வந்தார்.

சரி எனக்குதான் கதை சொல்லப்போகிறார் என நினைத்தேன். ஆனால், அவர் கதை சொல்ல வந்தது என் மகனுக்கு. அந்த கதை நன்றாக இருந்தது. ஆனால், இன்னும் 2 வருடங்களுக்கு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என என் மகன் கூறிவிட்டார். அவருக்கு என்ன விருப்பம் இருக்கிறாதோ அதை அவர் செய்யட்டும். அவருக்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும்’ என விஜய் கூறினார்.