சமூகவலைத்தளங்களில் அரசியல்வாதிகளை அவதூறாக விமர்சிக்கக் கூடாது, மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கக் கூடாது என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசு பதவிகளில் இருப்பவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்க கூடாது. மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனம் செய்யக்கூடாது. பத்திரிக்கை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடமோ, மீம்ஸ் போடவோ கூடாது’ என இன்று காலை அறிக்கை வெளியானது.
தற்போது இதன் பின்னணி தெரியவந்துள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில், காவி நிற துணியை விஜய் கத்தியால் குத்தி கிழிப்பது போல ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. எனவே,பாஜகவை விஜய் கிழித்து தொங்கவிடப்போகிறார் என்பது போல் அவரின் ரசிகர்கள் மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இது பாஜக ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், விஜய் மக்கள் மன்ற உறுப்பினர்கள் சிலர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்தே விஜயிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.