web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

நடிகர் வினய்க்கு நடிகையுடன் விரைவில் டும் டும் டும்…. யார்தெரியுமா?…

vinay

உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் வினய்… அஜித் போல வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், தோல்வி படங்களில் நடித்து மார்க்கெட்டை பறி கொடுத்தார்.

ஹீரோவாக நடித்த வந்த அவர் மார்கெட் போனதால் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை படத்திலும் நடித்திருந்தார். விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார்.

vinay

அதன்பின் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ஹிட் அடித்த டாக்டர் படத்தில் டெரர் வில்லனாக அசத்தியிருந்தார். மேலும், சூர்யா நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

vimala

இந்நிலையில், இவர் நடிகை விமலாராமனை திருமணம் செய்து கொள்ளப்போவது தெரியவந்துள்ளது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

விமலாராமன் தமிழில் ராமன் தேடிய சீதை, இருட்டு உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், சில மலையாள படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: