web analytics
Thursday, February 2SOCIAL MEDIA

சாரிப்பா உன்னை அடிச்சிட்டேன்!… நடிகரிடம் மன்னிப்பு கேட்ட வில்ஸ் ஸ்மித்..

will smith

ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இண்டிபெண்டன்ஸ் டே, அலாவுதின் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் வில் ஸ்மித். இவர் கிங் ரிச்சர்ட் எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார். இது இவரின் முதல் ஆஸ்கர் விருது ஆகும்.

will smith

ஹாலிவுட் காமெடி நடிகர் கிரிஸ் ராக் மேடையில் எல்லோரையும் சிரிக்க வைக்க பேசிக்கொண்டிருந்த போது வில்ஸ் ஸ்மித்தின் மனைவியின் மொட்டை தலை பற்றி கிண்டலடித்தார். ஒரு நோயால் அவரின் தலை முடி கொட்டிய நிலையில் அவர் இப்படி கிண்டலடித்தது வில் ஸ்மித்துக்கு பிடிக்கவில்லை.

எனவே, மேடையில் ஏறி அந்த நடிகருக்கு ஒரு அறை விட்டார். மேலும், தனது இருக்கையில் வந்து அமர்ந்து ‘என் மனைவியின் தலை முடி பற்றி பேசாதே’ என கத்தினார். இது சர்ச்சையாக மாறியது. ஒருபக்கம் வில்ஸ் ஸ்மித் செய்தது சரிதான் என பலரும் ஆதரவு தெரிவித்தாலும், வன்முறையை நாங்கள் ஏற்பதில்லை என ஆஸ்கர் விருது அகாடமி அறிவித்தது.

will smith

இந்நிலையில், தன் செயலுக்கு வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் ‘என்னைப் பற்றிய நக்கல்களை என் வேலையின் ஒரு பகுதியாக சகித்துக்கொள்கிறேன்.

ஆனால், என் மனைவியின் மருத்துவ ரீதியிலான பிரச்சனைத் தொடர்பான கிண்டலை என்னால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. எமோஷனலாக ரியாக் செய்துவிட்டேன். நான் எல்லை மீறி இருக்கக் கூடாது. அது என் தவறு. கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.