actor yogibabu

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகராக உயர்ந்திருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களிலும் யோகிபாபு நடித்து வருகிறார்.

விஜயுடன் பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் யோகிபாபு நடித்திருந்தார். தற்போது விஜயின் 66வது படத்திலும் யோகிபாபு நடிக்கவுள்ளார்.

 

இந்நிலையில், இந்த படத்தில் தான் நடிப்பது தொடர்பான செய்தியை டிவிட்டரில் பகிர்ந்தார். இதையடுத்து நெட்டிசன் ஒருவர் ‘ நீ விஜய் கூட நடிச்ச மூனு படம் பிளாப்பு. சர்கார்-ல முருகதாஸ் அவுட், பிகிலில் அட்லி அவுட், அடுத்து நெல்சன் அவுட். இன்னும் இது தொடரும்’ என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு யோகிபாபு எந்த கோபத்தையும் காட்டாமல் ‘தேங்க்யூப்பா’ என கூலாக அவரின் ஸ்டைலில் பதிவிட்டுள்ளார்.

twitt