நடிகர் நாக சைத்தன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர், கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பின் இருவர் பற்றியும் பல வதந்திகள் பரவியது. சமீபத்தில், நாக சைத்தன்யாவுக்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக கூறி வதந்திகள் பரவியது. இப்படி ஒரு செய்தியை சமந்தாதான் தனது பி.ஆர்.ஓக்கள் மூலம் பரப்பிவிட்டார் என நாக சைத்தன்யா ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர்.

naga chaitanya

இதற்கு டிவிட்டரில் ரியாக்ட் செய்துள்ள சமந்தா ‘ஒரு பெண் பற்றிய வதந்தி எனில் அது கண்டிப்பாக உண்மை. இதுவே ஒரு ஆண் பற்றிய வதந்தி எனில் அது ஒரு பெண்ணால் பரப்பப்பட்டது. வளர முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலை மற்றும் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

samantha