srinithi

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் மட்டுமே நன்றாக இருப்பதாகவும் மற்றபடி தேவையில்லாத செண்டிமெண்ட் காட்சிகள் போரடிப்பதாகவும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

படம் வெளியான முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வெளிவந்த சிலரிடம் யுடியூப் சேனல் பலரும் ‘படம் எப்படி இருக்கிறது’ என கேள்வி கேட்டு அந்த வீடியோவை ஒளிபரப்பினர். சீரியல் நடிகை ஸ்ரீநிதி படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது அவரிடம் கேட்ட போது ‘அஜித் அழகாக இருக்கிறார். ஆனால் படம் ஓடுவதை விட பைக்தான் அதிகமாக ஓடுகிறது’ என கருத்து கூறினார்.

இது அஜித் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை கண்டபடி திட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீநிதி இதற்கு விளக்கமளித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ‘ நான் பணம் கொடுத்து படம் பார்த்தேன். அதை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லையா?… நான் விஜய் ரசிகை என்பதால் இப்படி பேசுகிறேன் எனக்கூறுகிறார்கள். உண்மையில் நான் சிம்பு நடிகை.. அஜித்தை பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை. படத்தை பற்றித்தான் பேசினேன்.நான் ஜாலியாகத்தான் அப்படி சொன்னேன். அது இப்படி சீரியஸாகும் என எதிர்பார்க்கவில்லை. அஜித் ரசிகர்கள் என்றால் பெண்களை அசிங்க அசிங்கமாக் பேசுவீர்களா?’ என அழுதபடி பேசியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Nidhi (@sreenidhi_)