2014ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பேய் திரைப்படம் பிசாசு. இப்படம் வியாபார ரீதியாக வெற்றிபெற்றது. தற்போது 6 வருடங்கள் கழித்து பிசாசு படத்தின் 2ம் பாகத்தை மிஷ்கின் எடுக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் பிசாசு வேடத்தில் பூர்ணா நடிக்கவிருப்பதாக தெரிகிறது. பிசாசு முதல் பாகத்தில் பிரயக மார்ட்டின் பிசாசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.