நடிகர் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தொட்டுள்ளது. பல வருடங்களுக்கு பின் மாநாடு படம் சிம்புவுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
இப்படத்திற்கு பின் கொரோனா குமார் என்கிற படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம்தான் தற்போது சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிதி ஷங்கர் தற்போது கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.