web analytics
Monday, August 8SOCIAL MEDIA

ஜகமே தந்திரம் ஓடிடி ரிலீஸால் ‘ஏலே’ படத்திற்கு வந்த சிக்கல்…

aelay

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே வெளியாகவேண்டிய திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி மற்றும் ரகிட ரகிட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.ஆனால், இப்படம் நேரிடையாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் தனுஷுக்கும், கார்த்திக் சுப்பாராஜ் இருவருக்குமே விருப்பமில்லை. ஆனாலும் , தயாரிப்பாளர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்நிலையில், அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘ஏலே’ இன்று வெளியாகவிருந்தது. ஆனால், ஜகம தந்திரத்தை அவர் ஓடிடிக்கு கொடுத்துவிட்ட காரணத்தால் கோபத்தில் இருக்கும் தியேட்டர்கள் அதிபர்கள் ஏலே படத்திற்கு தியேட்டர் கொடுக்கவில்லை. எனவே, இப்படத்தையும் வருகிற 28ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் வெளியிடுவதாக அறிவித்துவிட்டார்.

%d bloggers like this: