aishwarya danush

நடிகர் தனுஷும் அவரின் மனைவி ஐஸ்வர்யாவும் சமீபத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் அவர்கள் பிரிவதாக அறிவித்தனர். 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

danush

இருவரையும் சேர்த்து வைக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், அவை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஐஸ்வர்யா இயக்கியுள்ள ஆல்பம் பாடல் வீடியோவுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவிக்க, ஐஸ்வர்யா நன்றி கூறினார். எனவே, இருவரும் மீண்டும் இணைவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இருவரும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.

aishwarya

இந்நிலையில், டிவிட்டரில் ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார். இதன் மூலம் இருவரும் இனிமேல் இணைய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. அதேநேரம், இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா இன்னும் ஐஸ்வர்யா தனுஷ் பெயரிலேயே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.