அண்ணாத்த படத்திற்கு பின் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிளாக் காமெடி படம் எடுக்கும் நெல்சனுடன் ரஜினி இணையவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்ட் பட வேலைகளை முடித்த பின் நெல்சன் இந்த படத்தை துவங்குவார் என கருதப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாம் என நெல்சன் ஆசைப்படுகிறாராம். ஐஸ்வர்யா ராஜ் ஏற்கனவே எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
எனவே, அதற்கான பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளார். ஐஸ்வர்யா ராய் சம்மதித்தால் அவரே ரஜினியுடன் நடிப்பார் எனத் தெரிகிறது.
இந்த திரைப்படம் ரஜினியின் 169வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.