தமிழ் சினிமாவில் காக்கா முட்டை திரைப்படம் மூலம் சிறந்த நடிகை என நிரூபித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின் கனா உட்பட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

எனவே, பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கிராமத்து கதை என்றால் இயக்குனர்கள் ஐஸ்வர்யா ராஜேஷைத்தான் அழைக்கின்றனர். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை படத்திலும் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

aishwarya

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் நடித்தது பற்றி பேசிய அவர் ‘வெற்றிமாறனின் வழிகாட்டுதலில் என்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. நான் நடித்ததை பார்த்து தனுஷுக்கு காதலே வந்துவிட்டது. வட சென்னையில் எனக்கு கிடைத்த நல்ல பெயர் நான் எப்போதும் எதிர்பார்க்காத ஒன்று’ என அவர் உருகி பேசியுள்ளார்.