வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார்.
இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. ஆனால்,திடீரென அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். அங்கு பைக்கில் அவர் உலகம் சுற்றி வருகிறார். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது.
அஜித் இல்லாததால் அவர் இல்லாத காட்சிகளை வினோத் எடுத்து வந்தார். தற்போது அஜித் இல்லாமல் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலையில், படக்குழு சென்னை திரும்பிவிட்டது. சென்னையிலேயே செட் அமைத்து படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறதாம். அஜித் திரும்பி வந்த பின்னரே மீண்டும் படப்பிடிப்பு ஜரூராக துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.